முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளிக்கு விழுப்புரத்தில் 29-ம் தேதி மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      தமிழகம்
Ma Supramanian 2024-08-21

Source: provided

சென்னை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளிக்கு வரும் 29-ம் தேதி  விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருந்து பெட்டகத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்த திட்டத்தில் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.

வருகிற 29-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறார். அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்.  அவருக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து