முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2024-11-11

Source: provided

 சென்னை : அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா இன்று கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.  

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜானகி அம்மையார், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படங்களுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்து விழா மலரையும் வெளியிடுகிறார். 

ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில்  கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெறுகிறது.  முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி நன்றியுரை வழங்குகிறார். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும், கலைத் துறையைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் என பலரும் கலந்து கொள்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து