முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல் அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
Himachal--bus-2024-11-27

சிம்லா, அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேச போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் அம்மாநில துணை முதல்வரும், போக்குவரத்து அமைச்சருமான முகேஷ் அக்னிஹோத்ரி  ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம்  கூறியதாவது;

மாநிலம் முழுவதும் 1,000 பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் இயக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 327 எலக்ட்ரிக் பஸ்களும் அடங்கும். மேலும் 250 மினி பஸ்கள், 100 மினி டெம்போ பஸ்களை இயக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

போதை ஒழிப்பு மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்கள் நீக்கப்படும். விவசாயிகள் நலன் கருதி, பஸ்களில் கொண்டு வரப்படும் பால், காய்கறிகள் ஆகியவற்றுக்கு கட்டணம் விதிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

அரசு பஸ்கள் மூலம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கூடுதலாக 14 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. தினமும் 5 லட்சம் பயணிகள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் முக்கிய தேவைகளுக்காக, வருவாய் குறைவாக இருக்கும் வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து