முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரகிரியில் மழையைப்பொருத்து பக்தர்களுக்கு மலையேற அனுமதி துணை இயக்குநர் தகவல்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
SathuraGiri

Source: provided

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்குச் செல்வதற்கு தினசரி மழையின் அளவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாள்கள் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று முதல் (28-ம் தேதி) டிசம்பர் 1-ம் தேதி வரை 4 நாள்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாடு நடைபெறுகிறது. வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெரிய அளவில் மலை பெய்யாததாலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படாததாலும் சதுரகிரி செல்ல பக்தர்களுக்குத் தடை இல்லை. ஆனாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தினசரி மழைப் பொழிவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் எனப் புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து