முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால்,ஜஸ்ப்ரிட் பும்ரா முன்னேற்றம்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      விளையாட்டு
27-Ram-50-B

Source: provided

துபாய்; ஐ.சி.சி. வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார். மேலும், இந்திய கேப்டன் ஜஸ்ப்ரிட் பும்ரா பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

புதிய பட்டியல்...

ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாரம்தோறும் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. அதில், சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ம் இடம் பிடித்துள்ளார். 825 புள்ளிகள் பெற்ற ஜெய்ஸ்வால் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி 13வது இடம்...

அதேவேளை, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 13வது இடம் பிடித்துள்ளார்.

மீண்டும் முதல் இடம்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய பும்ரா (883) பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அஸ்வின் (807 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4வது இடத்திற்கு வந்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா (423 புள்ளி) முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (290 புள்ளி) 2வது இடத்திலும் தொடர்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து