முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.3,383 கோடி சொத்துடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ முதலிடம்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
BJP 2023 04 10

மும்பை, மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.3,383 கோடி சொத்துடன் பாஜக எம்.எல்.ஏ முதலிடம் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிராத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 43.42 கோடி என்று ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ADR) கூறியுள்ளது; இது, 2019 ஆம் ஆண்டின் சராசரியான ரூ. 22.42 கோடியைவிட இரு மடங்கு அதிகமாகும். மேலும், முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல்களையும் ஏடிஆர் வெளியிட்டுள்ளது. கிழக்கு கத்கோபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான பராக் ஷா (பாஜக) ரூ. 3,383 கோடியுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் பன்வேல் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் ராம்சேத் தாகூர் (பாஜக) ரூ. 475 கோடியுடன் உள்ளார். ரூ. 447 கோடியுடன் மலபார் ஹில் எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோஹத் (பாஜக) மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒவாலா மஜிவாடா தொகுதி எம்.எல்.ஏ. பிரதாப் பாபுராவ் சர்நாயக் (சிவசேனை) ரூ. 333 கோடியுடன் நான்காவது இடத்தில் உள்ளார். ஐந்தாவது இடத்தில் மன்கர்ட் சிவாஜிநகர் எம்.எல்.ஏ. அபு அசிம் அஸ்மி (சமாஜவாதி) ரூ. 309 கோடியுடன் உள்ளார்.

ஆறாவது இடத்தில் ரூ. 299 கோடியுடன் பலுஸ்-கடேகவன் எம்.எல்.ஏ. கதம் விஸ்வஜித் பதங் ராவ் (காங்கிரஸ்), ஏழாவது இடத்தில் ரூ. 262 கோடியுடன் ஹிங்னா எம்.எல்.ஏ. சமீர் தத்தாத்ரயா மேகே (பாஜக), எட்டாவது இடத்தில் ரூ. 235 கோடியுடன் பரந்தா எம்.எல்.ஏ. டாக்டர். தனஜி ஜெயவந்த் சாவந்த் (சிவசேனை), ஒன்பதாவது இடத்தில் ரூ. 212 கோடியுடன் நய்கவன் எம்.எல்.ஏ. ராஜேஷ் சம்பாஜி ராவ் பவார் (பாஜக), ரூ. 208 கோடியுடன் வத்கவன் ஷேரி எம்.எல்.ஏ. பாபு சாஹிப் துகாராம் (தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார்) பத்தாவது இடத்தில் உள்ளார்.

மகாராஷ்டிராத்தில் சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிர்க்கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 10, சமாஜவாதி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து