முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி: சான்றிதழை பெற்றார் பிரியங்கா

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
Priyanka 2024-11-26

Source: provided

வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் நேற்று வழங்கினர்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்றதுடன், 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்று, 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராகுலைவிட பிரியங்கா குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும் ராகுலின் வாக்கு வித்தியாசத்தை பிரியங்கா முறியடித்து சாதனை படைத்தார். இதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தில்லியில் பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் நேற்று வழங்கினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அப்போது உடனிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு ஆதரவு அளித்த வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்தார். மேலும் வயநாடு தொகுதி பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து