எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட் கடந்த 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த செல்வராணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் இந்து மதத்திற்கு உட்பட்ட வள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், எஸ்.சி. இடஒதுக்கீட்டின் கீழ் கிளார்க் பணிக்காக விண்ணப்பித்தபோது தமிழக அரசு அதை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தபோது, செல்வராணி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, ஞானஸ்நானம் பெற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செல்வராணி மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதி பங்கஜ் மிட்டல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மனுதாரர் இந்து மதத்திற்கு மாறியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போதே சாதி அடையாளத்தை இழந்து விடுகிறார். ஏனெனில் அந்த மதம் சாதி அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
மதசார்பற்ற இந்திய நாட்டின் குடிமக்கள், எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்தவ நடைமுறைகளை ஏற்று வாழ்பவர், இடஒதுக்கீடு சலுகைகளுக்காக தன்னை இந்துவாக அடையாளம் காண முடியாது. இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டுமே தவிர, சட்டப்பூர்வ நன்மைகளை பெறுவதற்காக அல்ல. இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்தும் செயல்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளின் நேர்மைக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-11-2024.
27 Nov 2024 -
போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்
27 Nov 2024சென்னை, போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நடைதிறந்த 4 மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று காலை நடை திறந்த 4 மணி நேரத்திற்குள் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகராஷ்டிர முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
27 Nov 2024மும்பை, மகராஷ்டிராவில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார்.
-
3359 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
27 Nov 2024சென்னை, முதல்வர் மு.க.
-
இம்ரான்கானை விடுவிக்கக் கோரி நடந்த பேரணியில் மோதல் 6 பேர் உயிரிழப்பு: இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்
27 Nov 2024இஸ்லாமாபாத், இம்ரான்கானை விடுவிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
ஒப்பந்த மீறலில் ஈடுபட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்: ஹிஸ்புல்லாவுக்கு நெதன்யாகு எச்சரிக்கை
27 Nov 2024ஜெருசலேம், ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார
-
அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
27 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
-
ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு : மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்
27 Nov 2024லக்னோ, ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
27 Nov 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று 28-ம் தேதிபதவியேற்க உள்ளார்.
-
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
27 Nov 2024புது டெல்லி, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடு
-
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு: உறவினர்களால் தினமும் 140 பேர் கொல்லப்படுகிறார்கள் : ஐ.நா. தகவல்
27 Nov 2024நியூயார்க், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.
-
47-வது பிறந்த நாள்: தாய், தந்தையிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை
27 Nov 2024சென்னை, 47-வது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தாய் மற்றும் தந்தையிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
-
திருப்பதி கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம்
27 Nov 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்துள்ளார்.
-
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா இன்று பதவியேற்பு
27 Nov 2024புது டெல்லி, வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
பால் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும்: அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
27 Nov 2024சென்னை, பால் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது
27 Nov 2024புது டெல்லி, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக் கிழமை டெல்லியில் கூடுகிறது.
-
வைகுண்ட ஏகாதசி: ஜன. 10 முதல் 19-ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என த
-
இமாச்சல் அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை
27 Nov 2024சிம்லா, அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது.
-
உதகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு
27 Nov 2024உதகை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நேற்று உதகை சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து
-
குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதல் பணியாக இருக்க வேண்டும்: காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Nov 2024சென்னை, குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கஷ்டப்பட்டு பணி பெற்
-
டிச. 15-ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
27 Nov 2024சென்னை, இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
-
47-வது பிறந்த நாள்: துணை முதல்வர் உதயநிதிக்கு திருமா, கமல்ஹாசன் வாழ்த்து
27 Nov 2024சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர
-
உ.பி.யில் கார் மீது லாரி மோதல்: 5 டாக்டர்கள் உட்பட 6 பேர் பலி
27 Nov 2024லக்னோ, உத்தரபிரதேசத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில், டாக்டர்கள் 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வி.பி. சிங் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
27 Nov 2024சென்னை, இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங் என்று அவரது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.&n