முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு சிக்கல்? பூடானை ஆக்கிரமிக்கும் சீனா

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      உலகம்
China-2024-12-18

பூடான், பூடான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளால் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 22 கிராமங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியது மூலம் சீனா தனது எல்லையை வலுப்படுத்தியுள்ளது.

டோக்லாமில் கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது, இந்திய ராணுவம் தலையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. சுமார் 73 நாள்கள் மோதலுக்கு பிறகு இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

தற்போது பூடானின் டோக்லா எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் துணை ராணுவப் படையான சாஸ்திர சீமா பல் அந்நாட்டுப் படையுடன் இணைந்து பாதுகாத்து வருகின்றது.

ஆனால், டோக்லா பகுதிகளில் உள்ள 22 கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது. இது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 8 கிராமங்களை சீனப் படைகள் நிர்வகித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி பகுதி அருகேவுள்ள பூடான் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர சீனா-இந்தியா இடையே கடந்த அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. தொடர்ந்து, படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு சுமூக உறவு நீடித்து வருகின்றது. தொடர்ச்சியாக இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில்  நடைபெறும் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்கும் நிலையில், பூடான் எல்லைப் பிரச்னை வெடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து