முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய் சொல்வதை நிறுத்துங்கள்: அம்பேத்கர் விவகாரத்தில் காங். மீது பா.ஜ.க. தாக்கு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
JP-Natta 2023-09-12

புதுடெல்லி, அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது கடந்த 3 தினங்களுக்கு முன் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதன் எதிரொலியாக 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து தேசிய தலைவரும், மத்திய அமைச்சர் யுமான ஜே.பி.நட்டா கூறியதாவது:- அம்பேத்கரையும் அவரது மரபுகளையும் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. நேரு டாக்டர் அம்பேத்கரை வெறுத்தார். அதனால்தான் அம்பேத்கரை இரண்டு முறை தோற்கடித்தார் நேரு. அம்பேத்கருக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் அவருக்கு அனைத்தையும் செய்தது.

நடந்து முடிந்த பாராளுமனற் தேர்தல், பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மோசமாக செயல்பட்டது. தற்போது முடிந்த மராட்டிய தேர்தலிலும் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவைப் பற்றி வெளிநாடுகளுக்கு சென்று பொய்களைப் பரப்புகின்றனர். நமது அரசியலமைப்பு உருவானதில் காங்கிரசுக்கு எந்த பங்கும் இல்லை. அம்பேத்கரை பற்றி காங்கிரஸ் கட்சி உண்மையில் என்ன நினைக்கிறது?. இப்போதாவது அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்துங்கள். பொய்கள் எப்போதும் நிலைக்காது; உண்மை எப்போதும் வெல்லும். ஜெய் பீம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து