முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா குறித்து மைக் ஹசி

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-07-25

Source: provided

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் லபுஸ்ஷேன் கொடுத்த கேட்ச்சை ஜெய்ஸ்வால் தவற விட்டார். அதற்கு முன்பாகவே உஸ்மான் கவாஜா கொடுத்த கேட்சையும் ஜெய்ஸ்வால் கோட்டை விட்டிருந்தார். அதன் காரணமாக கோபமடைந்த ரோகித் சர்மா அருகில் நின்ற ஜெய்ஸ்வாலை திட்டும் வகையில் பேசினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ஜெய்ஸ்வால் மற்றுமொரு கேட்சை தவற விட்டார்.

இந்நிலையில் இளம் வீரரான ஜெய்ஸ்வாலிடம் ரோகித் சர்மா அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உண்மையை சொன்னால் கேப்டனிடம் இருந்து இது சரியான பாடி லாங்குவேஜ் கிடையாது. கண்டிப்பாக விக்கெட் வேண்டும் என்பதால் ரோகித் இவ்வாறு உணர்ச்சியை காட்டுவதை நான் பாராட்டுகிறேன். ஆனால் கேப்டனாக நீங்கள் உங்கள் வீரருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இங்கே யாருமே கேட்சை தவற விடாமல் இருக்க முடியாது. அது இளம் வீரரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________________

ஆஸி.வீரரை கலாய்த்த பும்ரா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த இன்னிங்சின்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுஸ்சேன் பலமுறை விக்கெட் கண்டத்திலிருந்து தப்பித்தார். ஜெய்ஸ்வால் ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன் உதவியில் அரைசதம் கடந்த அவர் முகமது சிராஜ் பந்துவீச்சில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் அரைசதம் அடித்ததற்கு அவருக்கு தவறவிடப்பட்ட வாய்ப்புகளே காரணமாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக தப்பிக் கொண்டிருந்த லபுஸ்சேன், பும்ரா ஓவரிலும் ஒரு முறை தப்பினார். அப்போது ஜஸ்பிரித் பும்ரா, லபுஸ்சேனை நோக்கி, "என் வாழ்நாளில் நான் பார்த்ததிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி பேட்ஸ்மேன் நீங்கள்தான், மார்னஸ்" என்று கலாய்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து