முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
EV-Velu

Source: provided

சென்னை : குமரியில் பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "தமிழக முதல்வர் கன்னியாகுமரிக்குச் சென்று கண்ணாடி இலை பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். அதை அவர் கொண்டு வந்தது இல்லை. 2018-ல் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் விதமாக பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

சாகர் மாலா திட்டத்தின் அடிப்படையில், அந்த திட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று, சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழை பெற்றோம். 2020-ல் கொரோனா காலம் என்பதால் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த தி.மு..க அரசு, டெண்டர் விட்டு அந்த பணியை செய்திருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலம் கட்டியது திராவிட மாடல் ஆட்சியில்தான். யார் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்கள், யார் செயல்முறைப்படுத்தினார்கள் என்பதுதான் முக்கியம். பலர் சட்டமன்றத்தில் கூட அறிவிப்பார்கள். அதனால் பாலம் கட்டினார்கள் என சொல்ல முடியாது. கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஒப்பந்தம் கோரி நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தினோம். தன் இருப்பை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி கூறும் அனைத்தும் உண்மையில்லை. கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது. திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, படுத்து உறங்கிவிட்டு எங்களது திட்டம் எனக் கூறினால் அது சரியல்ல" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து