எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
மெல்போர்னில்...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வரும் இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நிதிஷ் அபாரம்...
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 119. 3 ஓவர்களில் 369 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், லயன் மற்றும் போலந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் கான்ஸ்டாசை இந்த முறை 8 ரன்களில் பும்ரா கிளீன் போல்டாக்கினார்.
லபுஸ்சேன்- கம்மின்ஸ்....
அவரை தொடர்ந்து கவாஜா 21 ரன்களிலும், ஸ்டீவ் சுமித் 13 ரன்களிலும், ஹெட் 1 ரன்னிலும், மார்ஷ் ரன் எதுவுமின்றியும், கேரி 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த மார்னஸ் லபுஸ்சேன் - கேப்டன் கம்மின்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர். இந்த கூட்டணியை சிராஜ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியை வலுவான முன்னிலையை நோக்கி பயணிக்க வைத்த கம்மின்ஸ் 41 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தியா தடுமாற்றம்...
பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்காட் போலன்ட் - நாதன் லயன் இணை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டியது. இந்த கூட்டணியை உடைப்பதற்கு கேப்டன் ரோகித் சர்மா பவுலர்களை மாற்றி மாற்றி தாக்குதல் கொடுத்தார். இருப்பினும் இந்திய பந்துவீச்சை சமாளித்து விளையாடிய அவர்கள் அணி 200 ரன்களை கடக்க உதவினர். மேலும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்தியா தடுமாறி வருகிறது.
228 ரன்கள் அடித்தது...
4-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 41 ரன்களுடனும், ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 days ago |
-
வரும் 2-ம் தேதி சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
31 Dec 2024சென்னை : வரும் 2-ம் தேதி சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலி
31 Dec 2024அமீரகம் : ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்றோர் மற்றும் சகோதரர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம்: ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல்
31 Dec 2024ராமேஸ்வரம் : ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
-
சென்னை புறநகர் ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
31 Dec 2024சென்னை : புத்தாண்டை முன்னிட்டு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி அதிகரிப்பு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
31 Dec 2024சென்னை : சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியல்: தீப்தி சர்மா முன்னேற்றம்
31 Dec 2024துபாய் : ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று (டிசம்பர் 30) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முன்னேறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை 33 சதவீதம் கூடுதல் பொழிவு : இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்
31 Dec 2024சென்னை : பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் வடகிழக்குப் பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட
-
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு : விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
31 Dec 2024சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
விஜய் ஹசாரே டிராபி தொடர்: தமிழகத்தை வீழ்த்திய விதர்பா
31 Dec 2024விசாகப்பட்டினம் : விஜய் ஹசாரே டிராபி தொடரில் கருண் நாயர் சதத்தால் தமிழகத்தை வீழ்த்திய விதர்பா அணி வெற்றிப்பெற்றது.
-
குமரியில் பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்
31 Dec 2024சென்னை : குமரியில் பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
-
ஆஸி. வீரர் டிராவிஸ் வெற்றி கொண்டாட்டத்தால் சர்ச்சை
31 Dec 2024மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது.
முகம் சுழிக்க...
-
பல்கலைக்கழக மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? - நாம் தமிழர் சீமான் கேள்வி
31 Dec 2024சென்னை : பல்கலை. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? என்று நாம் தமிழரம் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் குற்றச்சாட்டு
31 Dec 2024சென்னை : அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கட
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வினை முந்திய நாதன் லயன்
31 Dec 2024மெல்போர்ன் : டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, நாதன் லயன் முந்தியுள்ளார்.
-
தரவரிசையில் வைஷாலி முதலிடம்
31 Dec 2024உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்துள்ளார்.
-
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
01 Jan 2025சென்னை : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கடந்த 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2025.
01 Jan 2025 -
சென்னை எழும்பூர் -தூத்துக்குடி இடையே 145 ஆண்டுகளை நிறைவு செய்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்
01 Jan 2025சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் அதிவேக விரைவு ரயில் 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.
-
தமிழகத்தில் குமரி, அரூர் உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியீடு : புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்கவும் முடிவு
01 Jan 2025சென்னை : தமிழகத்தில் கன்னியாகுமரி, அரூர் உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள், காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்க மாநில அரசு அரசாணை வெளியிட்
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா புகைப்பட கண்காட்சியை மக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி
01 Jan 2025குமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா புகைப்பட கண்காட்சியை மக்கள் ஒருவாரம் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னை-போடி விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
01 Jan 2025சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் ஜன.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 பேருக்கு கவுரவ விருது வழங்கும் மன்னர் சார்லஸ்
01 Jan 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 பேருக்கு கவுரவ விருதை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் வழங்குகிறார்.
-
2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
01 Jan 2025மதுரை, ஜன. 02-: 2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
கோவில்களை இடிக்க உத்தரவா? முதல்வர் அதிஷி குற்றச்சாட்டுக்கு டெல்லி கவர்னர் சக்சேனா மறுப்பு
01 Jan 2025டெல்லி: துணை நிலை ஆளுநர் வி.கே.
-
அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரைரத்து செய்த தமிழ்நாடு அரசு
01 Jan 2025சென்னை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏஇஎஸ்எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.