முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.33 கோடி மதிப்பில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் புதிதாக அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

முதல்வர்  மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நேற்று மாலை தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இப்பூங்காவானது 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. சுமார் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து