முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை வழக்கில் அபாரதம்: டொனால்டு டிரம்புக்கு பின்னடைவு

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      உலகம்
Trump

வாஷிங்டன், பாலியல் வன்கொடுமை வழக்கில் ரூ.42 கோடி அபாரதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்புக்கு இந்த நிகழ்வு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார். டிரம்புக்கு எதிராக அவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை டிரம்ப் மறுத்து வந்தார்.

இந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இதனை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த ரூ.42 கோடி அபராதத்தை பெடரல் கோர்ட்டு உறுதி செய்தது. அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க இருக்கும் சூழ்நிலையில் டிரம்புக்கு எதிராக வந்துள்ள இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து