முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 1,675 குடியிருப்புகள் உள்பட பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
modi 2025-01-03

Source: provided

புதுடெல்லி: டெல்லி அசோக் விகார் பகுதியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி நேற்று தலைநகர் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். டெல்லி அசோக் விகாரில் ஸ்வாபிமான் அடுக்கு மாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார். டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் 2-வது குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் நிறைவு இதுவாகும். சரியான வசதிகளுடன் கூடிய சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

டெல்லி நவுரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத்தொகுப்பு குடியிருப்புகளை தொடங்கி வைத்தார். சரோஜினி நகரில் உள்ள குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது ஆகும். டெல்லி துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை தொடங்கி வைத்தார். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கிழக்கு டெல்லியில் உள்ள சூரஜ்மல் விகாரின் கிழக்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகம் துவாரகாவில் உள்ள மேற்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். நஜாப்கரின் ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து