முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடியவர் : வேலு நாச்சியார் பிறந்த தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
pm 2025-01-03

Source: provided

புதுடெல்லி: காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடியவர் என்று வேலு நாச்சியார் பிறந்த தினத்தில்  பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் [1730 -1796]. அவரது 295-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ராணி வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- துணிச்சல்மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்கிறேன்! காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார். இணையற்ற வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினார். ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராட தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை மேம்படுத்துவதில் அவரது பங்கு பரவலாகப் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து