முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்: சீனா அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      உலகம்
China 2024 07 31

சீனா, புதிய வைரஸ் தொற்று குறித்து  மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சீனா அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருக்கும்.

நோய்களின் தீவிரம் குறைவாக உள்ளது. முந்தைய ஆண்டை விட சிறிய அளவில் பரவுகிறது. சீன குடிமக்கள் மற்றும் சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சீனாவில் பயணம் செய்வது பாதுகாப்பானது. தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து