முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதாகைகளுடன் கோஷம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
ADMK-1 2025-01-06

Source: provided

சென்னை : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டதால் குண்டுக்கட்டாக அவர்கள் அனைவரும் பாதுகாவலர்களால் வெளியேற்றப் பட்டனர். 

சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டனர். அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபடி சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள். அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு, அவர்களை இருக்கையில் அமருமாறு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது சபாநாயகர் கூறுகையில், கலவரம் செய்யும் நோக்குடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். திட்டம் போட்டு குந்தகம் விளை விக்கும் வகையில் செயல்படுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு சென்று அமராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சபாநாயகர் அப்பாவு, அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் உள்ளே வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து