முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை: பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேரவையில் அவர் பேசியதாவது:-  பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் கவர்னர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. கவர்னர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை.

கவர்னர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு, கடந்த ஆண்டே கவர்னருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை கவர்னர் கூறி வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என்றார். 

தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். ஆனால் அவர் தனது உரையை நிகழ்த்தாமலேயே பேரவையில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து