முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      ஆன்மிகம்
Ramanathapuram 2025-01-05

Source: provided

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள  ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.

ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு மங்களநாதர் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் சாமி காப்பு கட்டுதல் நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மங்களநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் உற்சவர் அன்னம், ரிசபம், மயில், பூதகணங்கள், பல்லக்கில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஜன.12 அன்று காலை 8 மணிக்கு மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனம் காப்புப் படி களைதல் மற்றும் 32 வகையான அபிஷேகங்கள், மூலிகை தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஜன.13 அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல் மற்றும் பக்தர்கள் தரிசனம், அன்று மாலை மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தல், கூத்தர் பெருமான் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து