முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் இயக்க ஏற்பாடு

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
Bus 2024-10-21

Source: provided

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்களுக்கு அரசு விடுமுறையை அறிவித்து உள்ளது. தொடர் விடுமுறையை அடுத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இதுபற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

10-13 தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுவரை 1.73 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும், இணையத்திலும் பேருந்துகளை முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஜன.15 முதல் 19 வரை மொத்தம் 15,800 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர் சென்றுவர மொத்தம் 22,676 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இரண்டு நாள்கள் ஆலோசனை நடைபெற்றது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும். மதுரவாயல், கோயம்பேடு சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து