முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற நிலையில்அதுகுறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், நேற்று கூடிய சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சற்றுமுன் சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். உரையாற்றாமல் சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கவர்னர் வெளியேறிய காரணம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், கவர்னர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. முதலில் ஒரு பதிவு இடப்பட்டு, அதனை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிடப்பட்டது. முதலில் பதிவிடப்பட்ட விளக்கத்தில் பாராளுமன்றத்தைப் பற்றிய ஒரு வாசகம் இடம்பெற்றிருந்தது. அதாவது, நாடாளுமன்றத்தில், முதலிலும், இறுதியிலும் தேசிய கீதம் பாடப்படும். குடியரசுத் தலைவர் உரை தொடக்கம் மற்றும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனும் வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால், உடனடியாக அந்த விளக்கம் நீக்கப்பட்டு மீண்டும் விளக்கம் பதிவிடப்பட்டது.

அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (நேற்று) மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் கவர்னர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. கவர்னர்  பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. கவர்னர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதல்வரிடமும், ட்டப்பேரவை சபாநாயகரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் கவர்னர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று விளக்கம் கொடுத்து, இந்தப் பதிவானது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் டேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து