முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட 19 பேருக்கு அமெரிக்காவின் உயரிய விருது

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      உலகம்
Joe-Biden 2023-11-14

Source: provided

வாஷிங்டன் : ஹிலாரி கிளிண்டன், மெஸ்சி, ஜார்ஜ் சோரஸ் உள்பட 19 பேருக்கு  அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருது நேற்று வழங்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜாார்ஜ் சோரஸ் , முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். மேலும் அமெரிக்க அரசியல் கட்சியால் அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இணைத் தலைவராக உள்ள தொண்டு நிறுவனத்திற்கு, ஜார்ஜ் சொரோசின் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜார்ஜ் சொரோசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, சொரோசுக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்குரியது. அவர் அடிப்படையில் மனிதகுலத்தை வெறுக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார். கால்பந்து வீரர் மெஸ்சி, போட்டிகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து