முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சிடப்பட்ட கவரனரின் உரையை சபாநாயகர் வாசித்தார்: அவைக்குறிப்பில் கவர்னரின் உரை மட்டுமே இடம்பெறும் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
appavu 2025-01-06

Source: provided

சென்னை: கவரனர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். பின்னர் அச்சிடப்பட்ட கவரனர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவரனர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம் என்பதால், கவரனர் பேரவைக்கு வந்தார். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும், கவரனர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து கவரனர் உரையை அப்பாவு வாசித்து முடித்தார். இந்த நிலையில், அச்சிடப்பட்ட கவரனர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவை முன்னவர், தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை எப்போதும் அதன் மரபை பின்பற்றி வருகிறது என்று அவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். மேலும், அச்சிடப்படாதவை அவைக் குறிப்பில் இடம்பெறாது எனவும் அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் கொடுத்துள்ளார். 

தொடர்ந்து பேசிய துரைமுருகன், தேசிய கீதம் மற்றும் அரசமைப்பு மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் கவரனர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. கவரனர் பதவி உள்ளவரை மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று அவையிலிருந்து கவரனர் வெளியேறியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். 2023-ம் ஆண்டு உரையில் இல்லாத சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் கவரனர் உரையாற்றினார். 2024ஆம் ஆண்டிலும் தனது உரையை கவரனர் முழுமையாக வாசிக்கவில்லை என்று கூறியுள்ளார் துரைமுருகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து