முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 மாவட்டங்களில் பதவி காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
tn 2025-01-06

Source: provided

சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில்  பதவிக்காலம் முடிவடைந்த ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியின்போது 2019-ம் ஆண்டில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றையும் சேர்த்து 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.

அதன்பின், 9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று, 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 2022ம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன. இந்நிலையில், 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் கடந்த ஐனவரி 5-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், பதவிக்காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. குறிப்பாக, சில ஊராட்சி பகுதிகளை, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் இணைப்பதற்கான பணிகள் நடக்க வேண்டியுள்ளன. இதனால், பதவிக்காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கிராம ஊராட்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று பதவி வகித்த தலைவா், துணைத் தலைவா், வார்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து