முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

சிட்னி : சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

சுற்றுப்பயணம்...

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது.  இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. குறிப்பாக, டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய காரணத்தினால் இந்திய அணி இந்த வாய்ப்பை இழந்தது.

50 புள்ளிகளாக...

இந்த சுழற்சியில் 8 தோல்விகளுடன் 52.77 புள்ளிகளில் இருந்து 50 புள்ளிகளாக குறைந்த இந்திய அணி, அட்டவணையில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. மறுபுறம், இதே சுழற்சியில் 11 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி 63.72 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரும் ஜூலை மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை 54-26 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில்.... 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஜூன் மாதம் இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி கடந்த சில மாதங்களாக கடுமையாக முயற்சித்து வந்தது. இருப்பினும் உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதில் இந்தியா பின்னடைவை சந்தித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து