முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவின் மெக்காவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      உலகம்
Mecca-city-2024-06-13

Source: provided

ரியாத் : சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மெதினாவில் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இயல்பு வாழக்கை பாதிக்கப் பட்டுள்ளது 

சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மெதினாவில் பல பகுதிகள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெட்டா நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மோசமான வானிலையால் ஜெட்டா விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெக்காவில் பள்ளிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் 997 எண்ணை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பத்ர் பகுதிக்குள்பட்ட அல்-ஷஃபியாவில் 49.2 மி.மீ., ஜெட்டாவின் அல்-பசாட்டீனில் 38 மி.மீ., மெதினாவில் மத்திய ஹராம் பகுதியில் 36.1 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனிடையே, அங்கு புதன்கிழமை வரை மழை தொடருமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து