முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கம்யூ. நிர்வாகி கொலை வழக்கு: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      இந்தியா
Kerala-High-Court 2023-10-0

Source: provided

கோழிக்கோடு : கேரளாவில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் சுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரிஜித் சங்கரன் (25). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் நிர்வாகியாக இருந்தார். ஆர்எஸ்எஸ், சிபிஎம் இடையே அரசியல் பதற்றம் நிலவி வந்த நேரத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு அக்.3 அன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் சுண்டா பகுதியிலுள்ள கோவிலின் அருகில் வைத்து ரிஜித் சங்கரன் கொல்லப்பட்டார்.

ரிஜித் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் கிணற்றுப் பகுதியில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திடீரெனத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ரிஜித்தின் நண்பர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில், கடந்த ஜன. 4 அன்று கொலை செய்ததாகக் கருதப்படும் நபர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தலசேரி மாவட்ட கூடுதல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. 10 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

குற்றவாளிகளான சுதாகரன் (57), ஜெயேஷ் (41), ரஞ்சித் (44), அஜீந்திரன் (51), ராஜேஷ் (46), ஸ்ரீ காந்த் (47), ஸ்ரீஜித் (43), பாஸ்கரன் (67) ஆகியோருக்கு கொலை, கொலை முயற்சி, கும்பலாக இணைந்து சட்டவிடோத நடவடிக்கையில் ஈடுபடுதல், கலவரம், ஆயுதங்களால் தாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 19 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து