முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆகப் பதிவு: நேபாளம், திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடும் 95 பேர் உயிரிழப்பு - 130 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      உலகம்
Earthquack 2024-12-06

Source: provided

காத்மாண்டு: சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் நேற்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் உள்ள டிங்ரி கௌண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகவே பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் பாதிப்பு வட இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார், புதுடில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் நேபாளம் எல்லையில் திபெத்தில் 95க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேபாளத்தின் காத்மாண்டுவில், வலுவான நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கமானது, சீனாவில் திபெத் பகுதிகளான காவ்ரேபாலஞ்ச்வோக், சிந்துபாலஞ்சோக் தாடிங் மற்றும் சோலுகும்பு மாவட்டங்களிலும் உணரப்பட்டது. 

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் விடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகியுள்ளன. கடந்த 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்ததையடுத்து, நேபாள மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த நிலநடுக்கம் வலுவாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேபாள - திபெத் எல்லையில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில், காலை 12.00 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து