முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி ரூ. 33 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை ரூ. 33 ஆக உயர்த்தி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக சத்துணவு மையத்தை கவனித்து வந்தால், அவர்களுக்கு பொறுப்புப் படியாக நாளொன்றுக்கு ரூ. 20 வீதம் மாதத்துக்கு ரூ. 600 வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கூடுதல் பொறுப்புப் படி நிதியை ரூ. 33 ஆக உயர்த்தி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.கூடுதல் சத்துணவு மையங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஊழியர்களுக்கு நாளொன்று ரூ. 33-ம், ஒரு மாதம் முழுவதும் பணிபுரிந்தால் ரூ. 1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு மேல் கூடுதல் மையத்தை கவனித்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே பொறுப்புப் படி வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொறுப்புப் படி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதற்காக கூடுதலாக ரூ. 6.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து