முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      சினிமா
Mansoo-Alikhan-

Source: provided

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு சென்னை ஐக்கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப்பொருட்களை விற்றதாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா். போலீசாரின் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஜெ.ஜெ. நகர் போலீசார் அலிகான் துக்ளக்கை கடந்த டிசம்பர் 4-ந் தேதி கைது  செய்து சிறையில் அடைத்தனர் .

அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கோர்ட்டில் போதைப்பொருட்கள் எதுவும் தன்னிடம் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து அலிகான் துக்ளக் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, அலிகான் துக்ளக்கிடம் இருந்து எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யவில்லை, மற்ற குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து