முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கியவர்கள்: மன்மோகன்சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கியவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் அரங்கில் இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரது உருவப்படங்களை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது:-

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக இருந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கிக்கொண்டிருந்தவர் மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இரண்டு முக்கியமான தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இருவருடைய இழப்பும் பெரிய இழப்பாகும். நாட்டுக்காக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான்.

டாக்டர் மன்மோகன் சிங் பிறவி அரசியல்வாதி அல்ல. ஆனால், இளங்கோவன் பாரம்பரியமிக்க ஒரு அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பேரனாக, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய மகனாக. இப்படி ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து இறுதி வரை அரசியல் வானில் வலம் வந்தவர்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால், டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், அமைச்சராகவும் இடம்பெற்றிருந்தவர் நம்முடைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர். இருபெருந்தலைவர்களை நாம் இன்றைக்கு இழந்திருக்கிறோம். டாக்டர் மன்மோகன் சிங் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.

அவர் நினைத்திருந்தால், எந்தக் கவலைகளும் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கையை அவரால் வாழ்ந்திருக்க முடியும். அவரைப் போன்ற பொருளாதார மேதைகள், சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக அரசியலில் நுழைந்து நிதி அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். அதுவும், மிக நெருக்கடியான நேரத்தில் அந்த பொறுப்பை ஏற்று இந்திய நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கிக் கொடுத்த பொருளாதாரத் திட்டங்கள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத டாக்டர் மன்மோகன், ஒரு முறையல்ல, இரண்டு முறை, மொத்தம் பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் ஆட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் எண்ணில் அடங்காதது. ஒவ்வொன்றும் மகத்தானவையாக அமைந்தது.

தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார். அந்த வகையில் பார்த்தால், மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு என்பது தமிழ்நாட்டிற்கு பெரும் இழப்பு என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். 

நண்பர் மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுடைய மறைவு என்பது என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் 'உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். 

மனதில் உள்ளதை மறைக்காமல் – அதே நேரத்தில் துணிச்சலாக - தெளிவாக – எதைப் பற்றியும் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர்தான் நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் நம்முடைய இளங்கோவன். இரு தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே, என்னுடைய புகழஞ்சலியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து, என் புகழுரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து