முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வீசும் பனிப்புயல்: 2,400 விமானங்கள் ரத்து; 2 லட்சம் பேர் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      உலகம்
USA 2025-01-06

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு அமெரிக்க நகரங்களில் கடுமையான பனி மழை பெய்து வருகின்றது. மிசோரி முதல் வர்ஜீனியா வரையிலான நகரங்களில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின் சேவை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வானிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் 2,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான வானிலையை அதிபர் ஜோ பைடன் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து