முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை: தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. அறிவித்திருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி.,  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து