முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமிகள், இளம்பெண்கள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை சட்டசபையில் முதல்வர் சட்டதிருத்த மசோதா தாக்கல்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் 2 சட்ட திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி 12 வயதுக்குள் உள்ள சிறுமிகள், 18 வயதுகுட்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது என சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-வது நாள் கூட்டம்...

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் 4-ம் நாள் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.இந்த நிலையில், நேற்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. 

கடும் தண்டனை....

2025-ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது, என்று முதல்வர் கூறினார். முதல்வர் தாக்கல் செய்துள்ள சட்ட திருத்த மசோதாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

சமூகப் பங்களிப்பு.... 

2 சட்டத்திருத்த முன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து, பேசியதாவது:- சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரக்கூடிய அரசாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம். இதன்மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது.

தயவு தாட்சணியமின்றி.... 

இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும், அதிகமான சமூகப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதில் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இரும்புக்கரம் கொண்டு... 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்கமுடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.

மாநில சட்டத்திருத்தம்...

இந்த வகையில் பி.என்.எஸ். சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக பி.என்.எஸ். மற்றும் பி.என்.எஸ்.எஸ். சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆசிட் வீச்சு சம்பவம்... 

தொடர்ந்து இந்த மசோதா தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- பெண்களுக்கு எதிராக மின்னணு உள்ளிட்ட பல்வேறு வழிமுறை மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.

ஆயுள்காலம் வரை... 

பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது. மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் வகை செய்யப்படும் என்று கூறினார். இந்த சட்ட திருத்தம் மீதான விவாதம் இன்று நடக்க உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து