முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.164 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் - ரூ.51 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சிவகங்கை : மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசு நிதியை செலவு செய்து செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முதல்வருக்கு செங்கோல் வழங்கினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. ரூ.51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.  ரூ.164 கோடியில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து 53,039 பயனாளிகளுக்கு ரூ.161.11 கோடியில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சிவகங்கை மண்ணுக்கு வந்தால் சிலிர்ப்பு ஏற்படுகிறது; வீரம் பிறக்கிறது. விடுதலை போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், குயிலி வாழ்ந்த மண்தான் சிவகங்கை. வீரத்துக்கு அடிப்படையான தமிழர்களின் தொன்மையை உலகுக்கு உறைக்கும் கீழடி இங்குள்ளது. வீரமும், புகழும் கொண்டு இந்த மாவட்டத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பாக வளர்த்தெடுக்கிறார். நான் நம்பி பொறுப்பு கொடுக்கும் பட்டியலில் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளார்.

சிவகங்கை சீமையை வளர்த்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.1,853 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணி விரைவில் முடிவடைய உள்ளது. சங்கரபதிகோட்டை புனரமைப்பு, ரூ.130 கோடியில் காரைக்குடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் 500 குடியிருப்புகள், ரூ.35 கோடியில் ஐடி பூங்கா, ரூ.100 கோடியில் சட்டக்கல்லூரி, சிறாவயலில் விடுதலை போராட்ட வீரர் தியாகி ஜீவானந்தத்துக்கு நினைவு மண்டபம், ரூ.62 கோடி மதிப்பில் செட்டிநாடு வேளாண் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகள் முடிவடைந்தும், நடைபெற்றும் வருகின்றன.

மேலும் மூன்றரை ஆண்டுகளில் 91,265 பேருக்கு ரூ.38.52 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியையும் நாடிச் சென்று உதவுவது தான் திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும், எல்லாம் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அண்ணணாக, தம்பியாக, மகனாக, தந்தையாக, உறவாக இருந்து வருகிறேன். சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டப்படும். திருப்பத்தூருக்குள் வாகனங்கள் வருவதை தடுக்க திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை, ரூ.30 கோடியில் காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும் ஆகிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருகிறோம். அதனால் தான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன செய்தோம் என்று மேடைகளில் புள்ளிவிவரத்தோடு பேசி வருகிறோம். திமுக ஆட்சியில் உபரி வருவாய் மாநிலமாக விட்டுசென்ற தமிழகத்தை 2013 முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அ.தி.மு.க. அரசு. தொடர்ந்து அதிக பற்றாக்குறை மாநிலமாக மாற்றிவிட்டு சென்றனர். நெருக்கடியாக இருந்த தமிழகத்தை நாங்கள் மீட்டுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர்களுக்கு இணக்கமான மத்திய அரசு இருந்தது. அப்போது எதையும் கேட்டு பெறவில்லை. பதவிக்காக மட்டும் புதுடெல்லிக்கு சென்றனர்.

ஆனால் அதே மத்திய அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசாக பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கிறது. மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறி தான் தமிழகத்தை முன்னேற்றி இருக்கிறோம். மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசு நிதியை செலவு செய்து செயல்படுத்தி வருகிறோம். அ.தி.மு.க. கையாளாகாத நிர்வாக சீர்கேடு ஒருபுறம், மத்திய அரசின் பாராமுகம் மற்றொருபுறம் இருந்தும் முன்னேற்றி வருகிறோம். தமிழகத்தை மத்திய அரசு எப்படி வஞ்சிக்கிறது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

நாங்கள் மக்களை என்னி திட்டங்களை செல்படுத்துகிறோம். சிவகங்கை மக்களின் வரவேற்பை பார்க்கும்போது உதயசூரியன் ஒளியில் தொடர்ந்து தமிழகத்தில் திமுக தான் ஆளும். மக்களுக்காக என்றும் உழைப்போம். ஒவ்வொரு வீட்டுக்கும் திமுக அரசின் சாதனை சென்று கொண்டிருக்கிறது. அது தொடரும்,” என்று அவர் பேசினார். இவ்விழாவில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோவி.செழியன், சாமிநாதன், கார்த்திசிதம்பரம் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து