முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 41 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
fisherman

Source: provided

ராமேசுவரம்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 41 பேர் நேற்று காலை தாயகம் திரும்பினர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர்.

செப். 18-ம் தேதி புத்தளம் நீதிமன்றம் 35 மீனவர்களுக்கு 06 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இலங்கை நீதிமன்றங்களால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை தரப்பில் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இந்த பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேர் அபராதம் ரத்து செய்யப்பட்டு, தண்டனை காலம் நிறைவடையும் முன்னரே விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் கடந்த ஜனவரி 15-ம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்ட மண்டபம் விசைப்படகு மீனவர்கள் 6 பேர், இந்த பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேர் என மொத்தம் 41 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனங்கள் மூலம் பாம்பன் மற்றும் மண்டபத்திற்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து