முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டு பெண் தளபதி சுட்டுக்கெலை

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Gun 2023-10-05

போகாரோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டு பெண்  தளபதி சுட்டுக் கெலை செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் நேற்று காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கி சூட்டில் பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போகாரோ மாவட்டத்தின் பன்ஷி ஜர்வா வனப்பகுதியில் ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையின் 209-வது பிரிவு கோப்ரா படையினரும் இணைந்து நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில், கிரித் மாவட்டத்தின் சத்ரோ கிராமத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளின் பெண் தளபதி சாந்தி மற்றும் தவத்தார் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் இன்ஸாஸ் ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொல்லப்பட்ட சாந்தியின் கணவரான ரண்விஜய் மஹாத்தோ என்பவர் பாதுகாப்புப் படையினரால் மிகவும் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு பயங்கரவாதி ஆவார். அவரை, பிடிக்க சுமார் ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்றுமுன்தினம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து