முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மதுதான் உள்ளது: ஆம் ஆத்மி ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் மது கிடைக்கிறது; ஆனால், குடிநீர்தான் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டெல்லி பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி ஆன்லைனில் கலந்துரையாடினார். 

அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் ​​ஆம் ஆத்மி கட்சி தனது அடித்தளத்தை இழந்து வருகிறது. அக்கட்சி மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. அதனால்தான் அவர்கள், தினமும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சி மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை மக்கள் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்கள். அக்கட்சியை அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.  டெல்லியில் மது கிடைக்கிறது, ஆனால் குடிநீர் தான் இல்லை. கேஜ்ரிவாலின் 'வசந்தமாளிகை' ஆம் ஆத்மியின் வஞ்சகம் மற்றும் அதன் பொய்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்குச்சாவடி ஊழியர்களின் பலம் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும்.

பெண்கள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸை நம்பவில்லை. ஆம் ஆத்மி பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி. ஆனால், பா.ஜ.க. உண்மையை அடிப்படையாகக் கொண்டது. நாம் சொல்வதை நாம் நிறைவேற்றுகிறோம் கடந்த பத்து ஆண்டுகளில், ஸ்டார்ட் அப்கள், நிறுவனங்கள் மற்றும் பிற திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். ஆனால் டெல்லியில், ஆம் ஆத்மி இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் பா.ஜ.க. சரி செய்யும். அதனால்தான் நாம் நமது தேர்தல் அறிக்கையில், கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து