முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி போலீசை தவறாக பயன்படுத்துகிறது: பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Kejriwal 2023 04 14

Source: provided

டெல்லி: டெல்லி போலீசை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்;

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அதிஷி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி போலீசை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது, டெல்லி போலீசை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது. டெல்லி போலீசார் அனைவரும் பா.ஜ.க.வுடன் இருக்கின்றனர். மக்களின் பாதுகாப்பிற்கு யாரும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்திற்கு இடையூறு செய்ய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து நேரடியாக உத்தரவு வந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி என்னிடம் கூறியுள்ளார். வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்களோ? என்ற அச்சமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. பிரசாரத்திற்கு தேவையான வசதிகளை போலீசாரே செய்துகொடுக்கின்றனர். ஆம் ஆத்மி பிரசாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பா.ஜ.க. தொண்டர்களுக்கு போலீசார் ஆதரவு அளித்து வருகின்றனர்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து