முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வானில் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்த ஏழு கோள்கள்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
NASA 2024-06-23

Source: provided

சென்னை : வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்து வரும் நிகழ்வானது ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நிகழவிருக்கிறது.

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயத்தை நேற்று முதல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.  வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கும்.

சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்துவிடும்.

பொதுவாகவே, ஒன்றிரண்டு கோள்கள் ஒன்றாக நெருங்கி வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல ஏழு கோள்கள் ஒன்றாக  அதுவும், கோடு போட்டதுபோல, ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களும் ஒன்றாக அணிவகுப்பதும் அதிசயமே அசந்துபோகும் நிகழ்வு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து