முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறப்பால் குடியுரிமை ரத்து முடிவுக்கு 22 அமெரிக்க மாகாணங்கள் எதிர்ப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் வெளிநாட்டவருக்குப் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதல் வேலை நாளிலேயே, பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக, அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது என்ற உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதனால், அமெரிக்காவில் வாழும் எண்ணற்ற வெளிநாட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆனால் அதேவேளையில், அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவைத் தடுக்கக் கோரி அமெரிக்காவின் 22 மாகாணங்கள், ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாக அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் இவ்வாறு கையெழுத்திட்டாலும், அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தம் பிறப்பால் குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பதை சட்ட நிபுணர்கள் ஒருமித்தக் குரலில் சொல்லியிருப்பதோடு, டிரம்பின் உத்தரவு நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களின் அட்டர்னி ஜெனரல்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கான உரிமைகளுக்காக ஆஜராகும் வழக்குரைஞர்கள் அனைவரும், பிறப்பால் குடியுரிமை ஒரு நிரந்தர சட்டம் என்றும் அமெரிக்க அதிபர், அரசியலமைப்பிற்கு மேலானவர் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து