முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டவர்: தலைமறைவு நக்சல் தலைவரை காட்டிக்கொடுத்த செல்பி

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Naxsal 2025-01-22

Source: provided

புவனேஸ்வர் : முப்பது ஆண்டு காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் மத்தியக் குழு உறுப்பினர், தனது மனைவியுடன் எடுத்த செல்பி எப்படி அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சல் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த சலபதி உள்பட 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா் . ஒடிஸா மாநில எல்லையையொட்டிய பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நக்சல் மத்திய குழுவின் உறுப்பினரான ஜெய்ராம் எனப்படும் சல்பதியை  கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பவா்களுக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவர் சுட்டுக்கொல்லப்பட்டது முக்கியத்துவம் பெற்றது.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சலபதி, பெரும்பாலும் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில்தான் நக்சல் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு 60 வயதாகிறது என்பதால் மூட்டு வலி பிரச்னையால் அதிகம் நடமாடாமல் இருந்துள்ளார்.  சலபதி காடுகளில் மறைந்து வாழ்ந்த காலத்தில், ஆந்திர -ஒடிசா எல்லை சிறப்பு மண்டலக் குழுவின் துணைத் தளபதியான அருணா என்கிற சைதன்யா வெங்கட் ரவியுடன் நெருங்கிப் பழகினார். பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சலபதியைப் பிடிப்பது பல பாதுகாப்புப் படையினரின் இலக்காக இருந்த நிலையில்தான், அருணாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு செல்பி அவரை அடையாளம் காண வழிவகுத்ததோடு, அவரது தலைக்கு ரூ. 1 கோடி வெகுமதி அறிவிக்கவும் காரணமாக இருந்தது. கடந்த மே 2016 இல் ஆந்திரத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து அங்கிருந்த நக்சலைட்டுகளின் ஸ்மார்ட்போனில் தான், தம்பதியினரின் இந்த செல்பி கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதன் பிறகுதான், அவரது அமைப்பின் தீவிர இயக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதகாவும், எப்போதும், தன்னைப் பாதுகாக்கும் வீரர்களுடன் அவர் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதும் கொல்லப்பட்டவர்களில் சலபதியும் ஒருவர் என்பதை இந்த செல்பி மூலமாகத்தான் அடையாளம் கண்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து