முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில்  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் டில்லியின் தற்போதைய கவுன்சிலர்களான அனிதா பசோயா (ஆண்ட்ரூஸ் கஞ்ச்), நிகில் சப்ரானா (ஹரி நகர்) மற்றும் தரம்வீர் (ஆர் கே புரம்) ஆகியோர் டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். பா.ஜ.க. சார்பில் மூவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களுடன் பேசுகையில்,

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் டில்லியை மேம்படுத்தச் சரியான நேரத்தில் மத்தியிலும், சட்டப்பேரவையிலும், நகராட்சியிலும் டிரிபிள் எஞ்சின் அரசு அமையும். டில்லியைச் சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்றுவதற்காக கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததாக அவர் கூறினார்.

சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மேயர் பதவியைப் பெறுவதன் மூலம் டில்லியில் டிரிபிள் எஞ்சின் அரசை பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. கடந்த 2024 நவம்பரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டில்லி மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் கவுன்சிலர்கள், ஏழு மக்களவை எம்.பி.க்கள் (பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்), மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் (ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்) மற்றும் டில்லியில் உள்ள 14 நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்களாக உள்ளனர். மூன்று கவுன்சிலர்கள் இணைந்ததன் மூலம், பா.ஜ.க.வின் எண்ணிக்கை, ஆம் ஆத்மி கட்சியை விட அதிகமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து