முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      தமிழகம்
Air

Source: provided

சென்னை: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை அடுத்து, விமானத்தில் அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள், கங்கா-காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்த போதிலும் ஏ.சி. முன்பதிவு பெட்டியை வடமாநில கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்ததால் கூட்ட நெரிசலில் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை திரும்ப முடியாமல் தவித்த தமிழக வீரர்கள் சென்னை திரும்ப உதவுமாறு 6 வீரர்கள் உள்பட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வரவுள்ளனர்.

வாரணாசியில் ரயிலில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து