முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லி முதல்வர் வரை! யார் இந்த ரேகா குப்தா?

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi-cm 2025-02-20

Source: provided

புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் இங்கே...

ரேகா குப்தா 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவராவார். 1976-ல் ரேகா குப்தாவின் குடும்பத்தினர் டெல்லிக்கு பெயர்ந்துவிட்டனர். அன்றிலிருந்தே அவர் டெல்லிவாசிதான்.

டெல்லி பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது ரேகா குப்தால் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினரானார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவிலும் இணைந்தார்.  1996-97 காலக்கட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார் ரேகா குப்தா. 

2000-ம் ஆண்டு அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பில் சேர்ந்து அதன் டெல்லி பிரிவு செயலாளராக பணியாற்றினார். அங்கே அவருடைய தலைமைப் பண்பு துரித கவனம் பெற்றது. அதன் நீட்சியாக அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை அவர் 2004 முதல் 2006-ம் ஆண்டு வரை அலங்கரித்தார். அங்கே அவர் காட்டிய வலுவான நிர்வாகத் திறன்களும், கட்சியின் மீதான அவரின் அர்ப்பணிப்பும் அடுத்தடுத்த உயரங்களை அவரை எட்டச் செய்தது.

2007-ஆம் ஆண்டு அவர் டெல்லி முனிசிபல் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டார். வடக்கு பிதாம்புரா தொகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2007 முதல் 2009 வரை டெல்லி முனிசிபல் கவுன்சிலில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக இருந்தார். இவை தவிர டெல்லி பா.ஜ.க. மகளிர் அணியின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவிகளையும் பெற்றார்.

இப்போது டெல்லியில் பா.ஜ.க. 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்றுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் பா.ஜ.க.வின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து