எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: ரூ.92.50 கோடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 155.28 கோடி ரூபாய் செலவில் 84,000 மெ.டன். கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்குகள், 39.37 கோடி ரூபாய் செலவில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 236.09 கோடி ரூபாய் செலவில் 2,82,750 மெ.டன். கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொது விநியோக திட்டத்தினை மேலும் செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டங்களில் புதிய வட்ட செயல்முறை கிடங்குகளை நிறுவவும், வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவினை மேம்படுத்தும் வகையிலும் புதிய கிடங்குகள் கட்ட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் 3000 மெ. டன் கொள்ளளவில் 4 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் 2000 மெ. டன் கொள்ளளவில் 4 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவில் 5 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவில் 4 கோடியே 96 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, வேலூர் மாவட்டம், பக்களப்பள்ளி வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவில் 4 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, திருவள்ளூர் மாவட்டம், ராமகிருஷ்ணராஜபேட்டை வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், என 26 கோடியே 97 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன.
விவசாயிகளின் நலன் கருதி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டத்தில் தோலி, கற்பகநாதர்குளம், பழையவலம், மேலவாசல் மற்றும் ஆலத்தூர் ஆகிய 5 கிராமங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்தோட்டம், பெருமங்கலம், காஞ்சிவாய் ஆகிய 3 கிராமங்களிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுமாணக்குடி மற்றும் மேலவாழக்கரை ஆகிய 2 கிராமங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூர் கிராமத்திலும் என 11 கிராமங்களில் தலா 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்தம் 6 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன.
விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது என்ற தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லை செயல் வடிவமாக்கும் விதமாக 2023-24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
அதன்படி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் 20 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 33,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நீலத்தநல்லூர் கிராமத்தில் 8 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களான காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜபாத் வட்டம், கட்டவாக்கம் கிராமத்தில் 14 கோடியே 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் கிராமத்தில் 14 கோடியே 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள், என 58 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் என மொத்தம் 92 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், பொது விநியோக திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வட்ட செயல்முறை கிடங்குகளின் கொள்ளளவினை மேம்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், செய்யூர் கிராமம் மற்றும் திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் கிராமம், கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சிவாயம் கிராமம், திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருமழிசை கிராமம், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், லக்கயன்கோட்டை கிராமம் ஆகிய இடங்களில் மொத்தம் 6000 மெ.டன். கொள்ளளவுடன் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-02-2025.
21 Feb 2025 -
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
21 Feb 2025புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.
-
நிதியை விடுவிக்க மறுப்பது துரோகம்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
21 Feb 2025சென்னை : கல்வித்துறை நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு
21 Feb 2025ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திறமையற்ற மா.செ.க்களை நீக்க முடிவு: ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த த.வெ.க. தலைவர் விஜய்
21 Feb 2025சென்னை : திறமையற்ற மா.செ.க்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு..க., பா.ஜ.க.வினர் மோதல்: 'கெட் அவுட்' ஹேஷ்டேக் : உலக அளவில் டிரெண்ட்
21 Feb 2025சென்னை : 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
21 Feb 2025ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழை அழிக்க மத்திய அரசு சதி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
21 Feb 2025சென்னை : இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
அரசியல் செய்ய என்ன இருக்கிறது: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
21 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
21 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து நேற்று விற்பனையானது.
-
வரி விதிப்பு காரணமாக பிரிக்ஸ் நாடுகள் பிரிந்து விட்டது: டிரம்ப்
21 Feb 2025வாஷிங்டன் : வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்: டெல்லியில் பெண் தாதா கைது
21 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி பெண் தாதாவை போலீசார் கைது செய்தனர்.
-
ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்
21 Feb 2025புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான் புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
21 Feb 2025திருச்சி : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்றும் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ள பள
-
இஸ்ரேலில் 3 பஸ்கள் மீது வெடி குண்டு தாக்குதல்
21 Feb 2025ஜெருசலேம் : இஸ்ரேலில் 3 பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ்
21 Feb 2025புதுடில்லி, டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை
21 Feb 2025பெங்களூரு, பறவை காய்ச்சல் பரவல் காரணமாக 3 மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
-
தமிழகம் வரும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : செல்வப்பெருந்தகை தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் 55 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்
21 Feb 2025திருப்பதி, புகாருக்குள்ளான 55 டாக்டர்களை பணி நீக்கம் செய்து ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.