எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆழ்ந்த கவலை...
அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது” என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக...
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “அலுவல் மொழிச் சட்டம், 1963”-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்றங்கள்...
நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது.
பயனளிக்காது...
எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட எனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி மத்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளது.
ஏற்க முடியாது...
மத்திய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான “சமக்ர சிக்ஷா” திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் மீண்டும் வலியுறுத்துகிறேன். தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் மத்திய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
பெரும் பாதிப்பு...
குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும். தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தீவிரத்தை உணர்ந்து...
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-02-2025.
21 Feb 2025 -
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
21 Feb 2025புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
திறமையற்ற மா.செ.க்களை நீக்க முடிவு: ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த த.வெ.க. தலைவர் விஜய்
21 Feb 2025சென்னை : திறமையற்ற மா.செ.க்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
21 Feb 2025ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நிதியை விடுவிக்க மறுப்பது துரோகம்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
21 Feb 2025சென்னை : கல்வித்துறை நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தி.மு..க., பா.ஜ.க.வினர் மோதல்: 'கெட் அவுட்' ஹேஷ்டேக் : உலக அளவில் டிரெண்ட்
21 Feb 2025சென்னை : 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
-
தமிழை அழிக்க மத்திய அரசு சதி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
21 Feb 2025சென்னை : இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
அரசியல் செய்ய என்ன இருக்கிறது: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
21 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
சற்று குறைந்த தங்கம் விலை
21 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து நேற்று விற்பனையானது.
-
வரி விதிப்பு காரணமாக பிரிக்ஸ் நாடுகள் பிரிந்து விட்டது: டிரம்ப்
21 Feb 2025வாஷிங்டன் : வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்: டெல்லியில் பெண் தாதா கைது
21 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி பெண் தாதாவை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு
21 Feb 2025ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான் புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
21 Feb 2025திருச்சி : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்றும் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ள பள
-
கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ்
21 Feb 2025புதுடில்லி, டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஜனாதிபதியுடன் ரேகா குப்தா சந்திப்பு
21 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் புதிதாக பதவியேற்ற முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
-
இஸ்ரேலில் 3 பஸ்கள் மீது வெடி குண்டு தாக்குதல்
21 Feb 2025ஜெருசலேம் : இஸ்ரேலில் 3 பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை
21 Feb 2025பெங்களூரு, பறவை காய்ச்சல் பரவல் காரணமாக 3 மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
-
தமிழகம் வரும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : செல்வப்பெருந்தகை தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்
21 Feb 2025புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.