முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாளான்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      தமிழகம்
EPS 2023-10-17

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான்று அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 24-ம் தேதி மாலை 4 மணிக்குக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.விற்கு புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகிற 24-ம் தேதி (திங்கட் கிழமை) மாலை 4 மணிக்கு, பூத் கமிட்டி அமைப்பது; கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது. கட்சி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து